Uncategorized

இந்த வாரம் ‘மெர்க்குரி: அடுத்தடுத்த வாரங்களில் என்ன படங்கள் ரிலீஸ்?

இந்த வாரம் ‘மெர்க்குரி: அடுத்தடுத்த வாரங்களில் என்ன படங்கள் ரிலீஸ்?

Uncategorized
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து நாளை மெர்க்குரி திரைப்படமும் அதனை அடுத்து வரிசையாக சென்சார் ஆன திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. தற்போது சென்சார் செய்யப்பட்டு தயாராக உள்ள படங்கள் காலா, விஸ்வரூபம் 2, இரும்புத்திரை, 'இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா, மெர்க்குரி, மிஸ்டர் சந்திரமௌலி, மோகினி, கரு, டிக் டிக் டிக், நரகாசூரன், இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த், அசுரவதம், காளி, பரியேறும் பெருமாள், ஆண் தேவதை, அபியும் அனுவும், களரி, காத்திருப்போர் பட்டியல், கோலி சோடா 2, கீ, இரவுக்கு ஆயிரம் கண்கள், பாஸ்கர் ஒரு ராஸ்கல், சர்வர் சுந்தரம், குப்பத்து ராஜா, ஆர்.கே.நகர், பார்ட்டி, கடைக்குட்டி சிங்கம், தமிழ்ப் படம் 2.0, ஆகிய படங்கள் ஆகும் இந்த படங்கள் சென்சார் ஆன தேதியின் அடிப்படையிலும் அந்தந்த படங்களின் தயாரிப்பா
திருப்பதியில் ரசிகர்களிடம் சிக்கிய காஜல் அகர்வால்

திருப்பதியில் ரசிகர்களிடம் சிக்கிய காஜல் அகர்வால்

Uncategorized
பிரபல தென்னிந்திய நடிகை காஜல் அகர்வால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கமான ஒன்று இந்த நிலையில் நேற்று காஜல் அகர்வால் தனது பெற்றோருடன் திருப்பதி சென்றார். ஆனால் அவரை பார்த்தவுடன் ரசிகர்கள் முண்டியடித்து அவரிடம் செல்பி எடுக்கவும், ஆட்டோகிராப் வாங்கவும் சூழ்ந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருமலை போலீசார் உடனடியாக ரசிகர்களிடம் இருந்து காஜல் அகர்வாலையும் அவரது குடும்பத்தினர்களையும் காப்பாற்றி கோவிலின் உள்ளே பாதுகாப்பாக அழைத்து சென்ற்னர். தரிசனத்திற்கு பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த காஜல், 'மன ஆறுதலுக்காக குடும்பத்தினருடன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தேன்” என்று கூறினார்
நடிக்க வராவிட்டால் இந்நேரம் சாய்பல்லவி ஒரு டாக்டர்

நடிக்க வராவிட்டால் இந்நேரம் சாய்பல்லவி ஒரு டாக்டர்

Uncategorized
பிரேமம் படத்தில் அறிமுகமாகி இன்று கேரளா மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கு புகழ் பெற்றிருக்கும் நடிகை சாய்பல்லவி என்பது தெரிந்ததே. நடிக்க வருவதற்கு முன்னர் ஜார்ஜியாவில் டாக்டருக்கு படித்த சாய்பல்லவி, திடீரென 'பிரேமம்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் டாக்டர் படிப்பை விட்டுவிட்டார். பிரேமம் ஹிட்டானதால் முழுநேர நடிகையாம மாறிவிட்டதாக்வும் ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் சவாரி செய்ய கூடாது. அதுவும் மருத்துவ தொழில் உயிர்கள் சம்பந்தப்பட்டது என்பதால் நடித்துக்கொண்டு டாக்டர் வேலை பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றும் சாய்பல்லவி கூறியுள்ளார். தனக்கு பிடித்த நடிகர் சூர்யா என்றும், அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை என்னால் நம்பவே முடியவில்லை என்றும் கூறிய சாய்பல்லவி, தற்போது சாய்பல்லவி, தனுஷின் 'மாரி 2, மிஷ்கின் இயக்கும் அடுத்த படம் மற்றும் ஒரு தெலுங்கு படம் என பிசியாக உள்ளார்.
சிவாஜி குடும்பத்தினர்களுடன் மீண்டும் இணைந்த விஜய்

சிவாஜி குடும்பத்தினர்களுடன் மீண்டும் இணைந்த விஜய்

Uncategorized
இளையதளபதி விஜய் சிவாஜி கணேசனுடன் 'ஒன்ஸ்மோர்' என்ற ஒரே ஒரு படத்தில் நடித்திருந்தாலும், அவருக்கும் சிவாஜி குடும்பத்தினர்களுக்கும் இடையே நெருக்கமான நட்பு உண்டு. இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்பு அனுமதி பெற்று 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு நடந்தது என்பது தெரிந்ததே. இந்த படப்பிடிப்பு இரண்டு நாள் விக்டோரியா ஹாலிலும், ஒருநாள் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டிலும் நடந்தது. ஏற்கனவே இதே அன்னை இல்லம் வீட்டில் விஜய் நடித்த 'தெறி' படத்தின் படப்பிடிப்பும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Mr.சந்திரமெளலி படப்பிடிப்பு முடிந்தது

Mr.சந்திரமெளலி படப்பிடிப்பு முடிந்தது

Uncategorized
கவுதம் கார்த்திக் நடித்த 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் நேற்றுடன் அவர் நடித்து வந்த இன்னொரு திரைப்படமான Mr.சந்திரமெளலி படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துள்ளது முதல் முறையாக கவுதம் கார்த்திக் தனது தந்தை கார்த்திக்குடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திக், கெளதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், சதீஷ், மகேந்திரன், அகத்தியன், மிமி கோபி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு விக்ரம் வேதா' புகழ் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் ரகுல் ப்ரித்திசிங்

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் ரகுல் ப்ரித்திசிங்

Uncategorized
  சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க ரகுல் ப்ரித்திசிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு விஞ்ஞான அறிவியல் கதையில் நடிக்கவுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ள இந்த படத்தை 24ஏஎம் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் நடிக்க பல முன்னணி நடிகைகள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரகுல் ப்ரித்திசிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் வெளிவந்த ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்தவர் என்பதும், தற்போது சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் NGK படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவும், டி.முத்துராஜ் கலை இயக்கமும் செய்யவுள்ளனர்.
‘மெர்சல்’ படத்தில் என் காட்சிகள் கட் செய்யப்பட்டுவிட்டது: சத்யராஜ் அதிர்ச்சி தகவல்

‘மெர்சல்’ படத்தில் என் காட்சிகள் கட் செய்யப்பட்டுவிட்டது: சத்யராஜ் அதிர்ச்சி தகவல்

Uncategorized
'மெர்சல்' படத்தில் சத்யராஜ், ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் என்பது தெரிந்ததே. ஆனால் அந்த கேரக்டர் அதிக முக்கியத்துவம் இல்லாத கேரக்டராக படத்தில் இருந்தது. இதுகுறித்து சத்யராஜ் கூறிய போது, 'உண்மையில் எனது கேரக்டர் குறித்த காட்சிகள் அதிகம் படமாக்கப்பட்டது. நான் சிகப்பு மனிதன் ' படத்தில் பாக்யராஜ்-செந்தில் காட்சிகள் போன்று சில சுவாரஸ்யமான காட்சிகள் படமாக்கப்பட்டது. ஆனால் படத்தின் நீளம் கருதி அந்த காட்சிகள் வெட்டப்பட்டது. இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அட்லி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.
ஜோதிகாவின் அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகள்

ஜோதிகாவின் அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகள்

Uncategorized
ஜோதிகா நடித்த 'நாச்சியார்' சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் அவர் வித்யாபாலன் நடித்த துமாரி சுளு' என்ற பாலிவுட் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார் ராதாமோகன் இயக்கவுள்ள இந்த படத்தில் ஜோதிகா ரேடியோ ஜாக்கியாக நடிக்கவுள்ள நிலையில் இந்த படத்தில் தற்போது லட்சுமிமஞ்சு இணைந்துள்ளார். இவர் ஜோதிகா வேலை செய்யும் எப்.எம்.ரேடியோவில் உயரதிகாரியாக நடிக்கவுள்ளாராம் மேலும் நடிகை லட்சுமி மஞ்சு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன்பாபுவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இவர் தமிழில் மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

கார்த்தியின் புதிய படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடக்கவிழா புகைப்படங்கள்

Uncategorized
கார்த்தியின் புதிய படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடக்கவிழா புகைப்படங்கள்
‘காலா’ ரிலீஸ்: தனுஷ் எடுத்த அதிரடி முடிவு

‘காலா’ ரிலீஸ்: தனுஷ் எடுத்த அதிரடி முடிவு

Uncategorized
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானதில் இருந்து இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது இந்த எதிர்பார்ப்பை வைத்து தனுஷ் இந்த படத்தின் வியாபாரத்தை ஆரம்பித்துவிட்டார். ரஜினி-ரஞ்சித்தின் முந்தைய படமான 'கபாலி' தெலுங்கு மாநிலங்களில் ரூ.30 கோடிக்கு விலை போனது. எனவே இந்த படத்தையும் அதே தொகைக்கு விற்பனை செய்ய தனுஷ் திட்டமிட்டார். ஆனால் 'கபாலி' தெலுங்கு மாநிலங்களில் எதிர்பார்த்த வசூலை பெறாததால், 'காலா' படத்தை தனுஷ் சொல்லும் விலைக்கு வாங்க முன்னணி தயாரிப்பாளர்கள் முன்வரவில்லை எனவே தெலுங்கு மாநிலங்களில் தனுஷ் இந்த படத்தை சொந்தமாக ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளார்.