தெலுங்கில் ‘டாக்ஸிவாலா’ படத்துக்கு பிறகு விஜய் தேவரகொண்டா நடித்து வரும் புதிய படத்தை இயக்குநர் க்ராந்தி மாதவ் இயக்குகிறார். இதில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், இஸபெல் லெயிட் நடித்து வருகின்றனர்.

‘கிரியேட்டிவ் கமர்ஷியல்ஸ் மீடியா & எண்டர்டெயின்மெண்ட் லிமிடெட்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

Acting

இன்னும் பெயரிடப்படாத இப்படம் ரொமாண்டிக் எண்டர்டெயினராக உருவாகி வருகிறது. தற்போது, இந்த படத்தில் இன்னொரு ஹீரோயினாக நடிக்க கேத்ரின் திரசா கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

– சிவா விஷ்ணு