பாரதிராஜா எவ்வளவு சிறப்பாக நடித்தாலும் சிறந்த நடிகன் என ஏற்றுக்கொள்ள மாட்டார் – ரஜினி காந்த்

பாரதிராஜா பன்னாட்டு திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் துவக்க விழா நடைப்பெற்றது. இந்த விழாவை நடிகர் ரஜினி காந்த் துவக்கி வைத்தார். இந்த விழாவில் திரையுலகினர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் ரஜினி கூறியதாவது, பாரதிராஜாவுக்கு என்னை பிடிக்கும் ஆனால் பிடிக்காது. திரைத்துறை என்பது பாரதிராஜாவின் உயிரோடு பின்னிப்பிணைந்தது. எவ்வளவு சிறப்பாகப் நடித்தாலும் சிறந்த நடிகன் என ஒத்துக்கொள்ள மாட்டார். மக்களுக்கு ஒருவரை பிடித்து விட்டால் ஒரு கலைஞன் செய்யும் அனைத்தையும் ரசிப்பார்கள். மேலும் பாரதிராஜாவின் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெறுவார்கள் என கூறினார்.

இதை தொடர்ந்து கமலஹாசன், பாண்டியராஜ் என திரையுலகினர் விழாவில் கலந்து கொண்டு பேசினர்.

மேலும் இது பற்றி பாரதிராஜா பேசியதாவது, “ கலைஞர்களை நான் உருவாக்கவில்லை. திறமையுடன் வந்தவர்களை நான் பட்டை மட்டும் தீட்டினேன். நான் வெறும் ரூ.330 உடன் லாரி ஏறி சென்னைக்கு வந்தேன். திரைத்துறையை என்னுடைய வாழ்க்கையை முழுமையாக்கியது” என கூறினார்.