இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தை இயக்கி வரும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படக்குழுவினர்களுக்கு ஒரு கடுமையான நிபந்தனையை விதித்துள்ளாராம்

கடந்த சிலநாட்களாக இந்த படத்தின் ஸ்டில்கள் மற்றும் சண்டைக்காட்சி ஒன்றின் வீடியோ இணையத்தில் லீக் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இனிமேலும் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க, படக்குழுவினர் அனைவரும் செல்போன் கொண்டு வரக்கூடாது என்ற உத்தரவை ஏ.ஆர்.முருகதாஸ் விதித்துள்ளாராம்

இந்த நிபந்தனை விஜய்க்கும் பொருந்தும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவரே செல்போனை கொண்டு வருவதில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிபந்தனைக்கு பின்னராவது லீக் நிறுத்தப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்