தணிக்கை குழு அதிகாரிகளின் பாராட்டை பெற்ற ‘இலை’

01:26 மணி

பெண் கல்வியை மையமாக வைத்து உருவாகியுள்ள “இலை” படத்துக்கு சென்சார் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Loading...

பெண்களை மையமாக்கி அவர்களின் கல்வியைப் பற்றிப் பேசும் படமாக உருவாக்கப்பட்டுள்ள  ஒரு படம்தான்’ இலை’. இப்படத்தை பினீஷ் ராஜ் இயக்கியுள்ளார். லீஃப்பு ரொடக்ஷன்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது.

ஸ்வாதி நாராயணன் நாயகியாக நடித்துள்ளார். எதிர் நாயகனாக சுஜீத்  நடித்துள்ளார். கன்னட நடிகர் கிங்மோகன் . மலையாள நடிகை ஸ்ரீதேவி  , ஷைன் குருக்கள், விஜு பிரகாஷ் , கனகலதா, சோனியா, அப்துல் ஹக்கீம்.  காவ்யா நடித்துள்ளார்கள்.இப்படம் வெளியீட்டுக்குத் தயாராகி உள்ளது. வருகிற ஏப்ரல்  21ஆம் தேதி வெளியாகவுள்ளது. “இலை” படத்தைப் பார்த்த தணிக்கைத் துறை அதிகாரிகள் யூ சான்றிதழ் கொடுத்ததுடன் படத்தைப் பாராட்டியுள்ளார்கள்.

“இது ஒரு தரமான படம். பெண் கல்வி பற்றி நல்ல கருத்தைச் சொல்லியிருக்கும் படம். வணிக ரீதியிலும் உருவாக்கப்பட்டுள்ளது.  படத்தைப் பார்த்த போது எந்த சர்ச்சைக்குரிய காட்சிகளும் இல்லை. எந்த வாக்குவாதமும் எழவில்லை. தணிக்கை  செய்ய எங்களுக்கு மிகவும் வசதியாகவும் மகிழ்ச்சியாகவும்  இருந்தது. இது மாதிரி அனுபவம். எப்போதாவதுதான் கிடைக்கும்.  “என்று பாராட்டியிருக்கிறார்கள்.

சென்சாரின் “யூ” சான்றிதழுடன் தணிக்கை அதிகாரிகளின் பாராட்டுகளைத் தங்கள் படத்துக்குக் கிடைத்து இருக்கும் தரச் சான்றிதழாக  எண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கிறது படக்குழு.

படம் பற்றி பற்றி படத்தை இயக்கியுள்ள பினீஷ் ராஜ் பேசும் போது, “இது வெறும் கருத்து சொல்லும் படமல்ல.இக்கதையில் வணிக சினிமாவுக்கான அனைத்து அம்சங்களும் உள்ளன. அப்படி ஒரு வணிக ரீதியிலான  முழுநீளப்படமாக உருவாகியுள்ளது தான் இந்த ‘இலை’ .” என்றார்.

(Visited 27 times, 1 visits today)
The following two tabs change content below.
மகாலட்சுமி
இவர் இணையதள செய்திகள் பிரிவில் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சினிமா மட்டுமல்லாமல் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சம்பவங்களை உடனுக்குடன் கொட்டுப்பதில் முதன்மையானவர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்ப்பதில் சிறப்பு புலமை வாய்ந்தவர். சினிமா துறையில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பழம்பெரும் நடிக- நடிகைகள், இயக்குனர்கள் குறித்த சுவையான சம்பவங்களை தொகுத்து சிறப்பு கட்டுரைகளாக வழங்குவதில் பெயர் பெற்றவர். தொடர்புகொள்ள- mahamurugan@gmail.com