சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேலைக்காரன்’ திரைப்படம் வரும் 22ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘U’ சான்றிதழ் கொடுத்துள்ளனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது சென்சார் அதிகாரிகள் படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினர்களை மனதார பாராட்டியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இப்போதைய சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துக்கள் இந்த படத்தில் இருப்பதாகவும், இந்த படம் வெற்றியடைவது சமூகத்திற்கே கிடைத்த வெற்றி என்றும் அவர்கள் பாராட்டியதாக தெரிகிறது.

சென்சார் அதிகாரிகளின் பாராட்டை பெற்றுள்ளதால் படக்குழுவினர்களை மிகுந்த உற்சாகமடைய அடைந்திருப்பதாகவும், சென்சார் அதிகாரிகளிடம் கிடைத்த பாராட்டு சிவகார்த்திகேயன் ரசிகர்களிடம் இருந்தும் நடுநிலை ஆடியன்ஸ்களிடம் இருந்தும் கிடைக்கும் என நம்புவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.