ஆதார் அட்டையாலும் தமிழ் சினிமாவுக்கு சிக்கல்

ஏற்கனவே ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரி, ஆன்லைன் பைரசி, திருட்டு விசிடி என தமிழ் சினிமா நொந்து நூலாகி இருக்கும் நிலையில் தற்போது சென்சார் அதிகாரிகளும் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை அலைச்சலை கொடுக்கின்றார்களாம்

தற்போது ஒருதிரைப்படம் சென்சாருக்கு செல்ல வேண்டும் என்றால் ஆன்லைனில் தான் விண்ணப்பிக்க வேண்டும். அதில் தயாரிப்பாளரின் ஆதார் அட்டையையும் இணைக்க வேண்டும். ஆதார் அட்டை தயாரிப்பாளருக்கு இல்லை என்றால் படம் சென்சார் செய்யப்படாது.

இந்த நிலையில் சில சமயம் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்திற்கு தயாரிப்பாளருக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறி திருப்பி அனுப்பிவிடுகிறார்களாம் சென்சார் அதிகாரிகள். இதனால் தயாரிப்பாளர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.