ரஜினியை மிரட்ட ப.சிதம்பரம் வீட்டில் சோதனையா? கராத்தே தியாகராஜன் பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு விரைவில் வர வாய்ப்புள்ளதாக அவரது நேற்றைய பேச்சில் இருந்து தெரிகிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் அவரை தங்கள் பக்கம் இழுக்க கடந்த பல வருடங்களாக பாஜக முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று ரஜினி அரசியல் குறித்து பேசிய 24 மணி நேரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ ரெய்டு வந்துள்ளதை அரசியல் விமர்சகர்கள் வேறு விதமாக பார்க்கின்றனர்.

ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்தால் அவருக்கும் இதே கதிதான் என அவரை பயமுறுத்துவதற்காகவே இந்த ரெய்டு என்றும் மறைமுகமாக ரஜினியை பயமுறுத்தவே இந்த நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் கூறியபோது, ‘அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக நடைபெறும் சோதனை இது. இத்தனை ஆண்டுகள் கழித்து சோதனை நடைபெறுவதற்கு காரணம் என்ன?. இந்த சி.பி.ஐ சோதனை மூலம் ரஜினிகாந்திற்கு பா.ஜ.க மிரட்டல் விடுகிறது. ரஜினிகாந்த் புதிதாக அரசியல் கட்சி தொடங்காமல் இருப்பதற்கான மிரட்டல் இது’ என்று கூறினார்.