அவரால்தான் என் வாழ்க்கை சீரழிந்தது: பிரபல நடிகை வேதனை

சின்னத்திரை நடிகர் கிஷோர் எனது வாழ்க்கையை சீரழித்தார் என்று பிரபல நடிகை சார்மிளா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

90களில் இளைஞர்களுக்கு மனதை கொள்ளையடித்தவர் நடிகை சார்மிளா. ஒயிலாட்டம், கிழக்கே போகும்பாட்டு, முஸ்தபா, நான், இவன் வேற மாதிரி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் முன்னாள் கணவர் தனது வாழ்க்கையை நாசமாக்கி விட்டதாக அவர் பரபரப்பு புகார் கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில்,

நான், கடல் என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருந்தபோது நடிகர் பாபு ஆண்டனியுடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொள்ளாமலே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தோம். பின்னர் எங்களுக்குள் ஏற்பட்ட மனகசப்பால் அவர் என்னை பிரிந்தார். அதன்பின் சின்னத்திரையில் கவனம் செலுத்தினேன். அப்போது டெலிவிஷன் தொடர்களில் நடித்த கிஷோர் சத்யாவுக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டோம். சில நாட்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம். திருமணத்துக்கு பிறகு நடிக்கக்கூடாது என்று கூறினார். இதனால் சினிமாவை ஒதுக்கினேன். அந்த சூழ்நிலையில் அப்போது விக்ரமுடன் நடிக்க வாய்ப்பு வந்தது. கணவரின் நிர்பந்தத்தால் அந்த படத்தை நிராகரித்தேன். அதன்பிறகு கிஷோரும் நானும் ஷார்ஜாவுக்கு சென்று வசித்தோம். அப்போது அவரது நடவடிக்கைகளில் பல மாற்றம் தெரிந்தது. தான் பிரபலமாவதற்காகவே என்னை அவர் மணந்தார் என்று புரிந்துகொண்டேன். அவரால் எனது வாழ்க்கையே நாசமாகி விட்டது என்றார்.

ஆனால் இதனை நடிகர் கிஷோர் மறுத்துள்ளார்.