சமூக வலைத்தள பக்கத்தில் எப்போதும் துறுதுறுவென இருக்கும் நடிகை கஸ்தூரி அவ்வப்போது சமூகப் பிரச்சனைகளை பற்றியும் கருத்துகள் தெரிவித்து வருபவர். இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பண விவகாரத்தில் தன்னை ஏய்ச்சியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சமூகவலைத்தளத்தில் ஏதாவது ஒரு பிரச்சனையை பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தில் வல்லவர் கஸ்தூரி. அதுபோல பிரச்சனையில் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கி நிற்பார். கோலிவுட்டின் முன்னாள் நாயகியான இவர் காஞ்சிபுரம் சிலை கடத்தல் பிரச்சனை குறித்து தன்னுடைய கருத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் அதில் அரசு சார்ந்த எல்லா துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுவது பற்றியும் பேசியுள்ளார். அரசு துறைகள் என்றாலே லஞ்சம், மோசடி திருட்டு என்பது தற்போது எல்லாம் சர்வ சாதாரணமாக மாறிவிட்டது எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதை பார்த்த ஒரு நபர், நீங்கள் படங்களில் நடிக்கும் போது வாங்கிய ஊதியத்துக்கெல்லாம் அதற்குரிய வருமான வரியை செலுத்தியிருக்கிங்களா? என அவரிடம் கேள்வி கேட்டார். அதற்கு தக்க பதிலடியாக கஸ்தூரி தெரிவித்தாவது, நான் எப்போதும் வரி ஏய்ப்பு செய்தது இல்லை. என்னை தான் பலர் பணம் விஷயத்தில் ஏய்ச்சிருங்காங்க! பேசி ஊதியத்தையே வாங்காம நாமம் போட்டுக்கிட்டது தான் அதிகம்! தமிழ்படம் 2வில் காட்டுவது போல் மழையில் கஷ்டப்பட்டு பாடி ஆடி கடைசியில மூணு ரூபா சம்பளம், அதுபோல தான்! என்று கூறியுள்ளார்.
அவரது கருத்தை பார்த்த நெட்டிசன் ஆதரவாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கஸ்தூரியின் இந்த பதிலை எதிர்பாரத ரசிகர்கள் வியந்து போய் இருக்கின்றனர்.
நான் வரி ஏய்ச்சதில்லை;என்னை பலர் காசு விஷயத்துல ஏய்ச்சிருக்காங்க ! பேசிய ஊதியத்தையே வாங்காம நாமம் போட்டுக்கிட்டதுதான் அதிகம் ! #tamizhpadam2 காட்டுறாங்களே, வெயிலு மழையில கஷ்டப்பட்டு பாடி ஆடி கடைசில மூணு ரூபா சம்பளம், அதுபோல தான் ! https://t.co/y5p7M2yE3z
— Kasturi Shankar (@KasthuriShankar) August 1, 2018