இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் விஜய்க்கு சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன் ஆகிய மூன்று நடிகைகள் ஜோடியாக நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமந்தாவின் அப்பாவாக நடிக்க பிரபல நாடக மற்றும் சினிமா நடிகர் சீனுமோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மெர்சல் படத்தில் நித்யாமேனன், காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது சமந்தாவுடன் விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன, இந்த நிலையில் சீனுமோகன் படத்தில் எண்ட்ரி ஆகிறார்

மேலும் விஜய்க்கும் சீனுமோகனுக்கும் அதிக காட்சிகள் இருப்பதாகவும் இதனால் சீனுமோகன் சந்தோஷத்தின் உச்சத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கிரேஸிமோகனின் நாடகத்தில் தொடர்ச்சியாக நடித்து வரும் சீனுமோகன் சமீபத்தில் வெளிவந்த ‘ஆண்டவன் கட்டளை’, ‘இறைவி’ போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.