மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் செக்கச்சிவந்த வானம் படத்தி டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டிரைலர் பக்கா மாஸாக உள்ளது.

மணிரத்தினம் இயக்கும் செக்கச்சிவந்த வானம் படத்தில் அருண் விஜய், அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா,மன்சூர் அலிகான் என பிரமாண்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. அதுமட்டுமல்ல, இந்த படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கின்றனர்.

இதனால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. செப்டம்பர் 28-ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. டிரைலரை பார்க்கும் போது படத்தில் அரவிந்த்சாமிக்கு மிக முக்கிய கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது தெரிகிறது.