சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் கடந்த 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

இப்படத்துக்கு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.வசூலில் பெரும் சாதனை படைத்து வருகிறது.

சென்னையில் முதல் நாள் ரூ. 88 லட்சமும், 2ம் நாள் ரூ. 86 லட்சமும், 3ம் நாள் ரூ1.04 கோடியும், 4ம் நாளான ஞாயிற்றுக்கிழமை ரூ.1.05 கோடியும் என மொத்தமாக சென்னையில் மட்டும் கடந்த 4 நாட்களில் விஸ்வாசம் படம் ரூ.3.83 கோடியை வசூல் செய்துள்ளது.

படம் நன்றாக இருக்கிறது என்கிற விமர்சனம் எழுந்துள்ளதால், பலரும் குடும்பத்துடன் இப்படத்தை கண்டு ரசித்து வருகின்றனர். பொங்கல் விடுமுறை 4 நாட்கள், அதன்பின் வெள்ளி, சனி, ஞாயிறு என வார இறுதி நாட்கள் வருவதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.