ஏழைகளுக்கு ரு. 2000 சிறப்பு நிதி வழங்கும் திட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதியாக அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் அறிவித்தார். ஆனால், இது சட்டவிரோதம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், ரூ. 2000 சிறப்பு நிதி வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அது அரசின் கொள்கை முடிவு. எனவே இதில் தலையிட முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.