சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனைவி லதாரஜினிகாந்த், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் டிராவல்ஸ் ஒன்றை கடந்த 25 வருடங்களாக நடத்தி வருகின்றார். இந்த கடைக்கு அவர் வாடகையாக மாதம் 3702 ரூபாயை செலுத்தி வந்த நிலையில், திடீரென வாடகை தொகையை 21160 ரூபாயாக உயர்த்தி சென்னை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து லதா ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், லதாவின் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் மாநகராட்சி வாடகையை ஏற்பதா வேண்டாமா என லதா ரஜினிகாந்த் ஒரு மாதத்தில் முடிவு செய்து கடை வேண்டும் என்றால் அதற்கான வாடகைத்தொகையை செலுத்த வேண்டும் என்றும் தவறினால் போலீஸ் உதவியுடன் அவரது கடையை மாநகராட்சி நிர்வாகம் காலி செய்யலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.