கடந்த சில வாரங்களாக பல நடிகர்கள் இயக்குனர்கள் மீது அதிரடி வெடிகுண்டுகளாய் அனல் கக்கும் பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி வருபவர் ஸ்ரீரெட்டி. தன்னைப்போலவே பிற பெண்களும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காகத்தான் என பெண்ணுரிமைக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார்.

இன்று வெளியிட்ட பதிவில் அம்மா ஜெ இருந்திருந்தால் எனக்கு நீதி கிடைத்திருக்கும் என முன்னாள் முதல்வர் ஜெவின் படத்தை போட்டு ஆதங்கப்பட்டுள்ளார்.

அதே போல் சென்னை அயனாவரத்தில் பல நபர்களால் தொந்தரவுக்குள்ளாக்கப்பட்ட வாய்பேச முடியாத சிறுமிக்காக வக்கீல்கள் ஆஜராகவில்லை என்பதற்காக அவர்களை மனதார பாராட்டியுள்ளார் ஸ்ரீரெட்டி