சென்னை மெரினா கடற்கரையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள், மெரினா கடற்கரைக்கு வந்துள்ளனர். அங்கு குதிரை சவாரி பணி செய்து வரும் செல்வம், சிறுமிகள் இருவரையும் பாலியல் ரீதியாக சீண்டியதாக கூறப்படுகிறது.

மேலும், ஒரு சிறுமியை குதிரையில் ஏற்றிச் சென்ற செல்வம், கட்டிட வேலை நடைபெறும் இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தாராம். தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி அவரது தந்தையிடம் கூறியுள்ளார்.

இது தொடர்பான புகாரில் செல்வத்தை கைது செய்த போலீசார், அவன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.