தமிழகம் முழுக்க இந்த வருடம் கோடைக்காலம் மிக உக்கிரமாக இருப்பதால் அதிகளவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதால் இந்தாண்டு கோடையை சமாளிப்பது மிகப்பெரிய தலைவலியாக உள்ளது. சென்னையின் தண்ணீர் தேவைக்கு ஆதாரமாக இருக்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் தண்ணீர் அளவு மிகக் குறைவாக உள்ளது.

இதனால் சென்னை மக்களுக்குத் தேவையான நீரை அளிப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. இதை முன்னிட்டு சென்னை குடிநீர் வாரியம் சென்னைவாசிகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதில் கோடைக் காலம் முடியும் வரை மக்கள் யாரும் ஷவரில் குளிக்க வேண்டாம் என்று கூறியுள்ளது. ஷவரில் குளிப்பதால் பக்கேட்டுகளில் குளிப்பதை விட மூன்று மடங்கு தண்ணீர் அதிகமாக செல்வாவதால் இந்த அறிவுரையை வழங்கியுள்ளது.

குடிநீர் தேவையை சமாளிப்பதற்கான மாற்று ஆதாரங்களையும் பயன்படுத்த துவங்கியுள்ளது குடிநீர் வாரியம்.