Director Cheran: தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வருபவர் நடிகர் அஜித். தல என்று அன்போடு அழைக்கப்படும் அவரது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. ரசிகர்கள், திரையுலகினர் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதில் இயக்குஅன்ர் செரனும் ஒருவர். இவர் தனது வாழ்த்து அறிக்கையில், எவ்வித பின்னணியும் இல்லாமல் திரைத்துறையில் நுழைந்து இன்று தனக்கென ஒரு இடத்தை பிடித்த அஜித்துக்கு வாழ்த்துக்கள் என்று கூறினார்.

இதையும் படிங்க பாஸ்-  மகளுக்காக அமெரிக்கா சென்ற விஜய்!

இந்த நிலையில் இதனை கண்ட விஜய் ரசிகர் ஒருவர் சேரனின் பதிவை நக்கலடிக்கும்படியாக அப்படியா என பதிவிட்டிருந்தார். இதைக் கண்ட சேரன் தனக்கே உரிய பாணியில் விஜய் சார் பிறந்தநாளுக்கும் வாழ்த்துக்களை சொல்வேன். கவலைபடவேண்டாம் சகோதரா என பதிலளித்துள்ளார்.