பீகார் மாநிலத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் உள்ள 5 சிறுவர்கள் இருமல் மருத்தை போதை மருந்தாக பயன்படுத்தி வந்தததை கண்டுபிடித்த வார்டனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் புர்னியே நகரத்தில் சிறுவர்களுக்கான சீர்த்திருத்த இல்லம் இருக்கிறது. இந்த அரசு கூர்நோக்கு இல்லத்தில் குற்றச் செயல்களில் ஈடுப்பட்ட அதாவது கலவரம், கொலை உள்பட பல குற்றச் செயல்களை செய்து குற்ற வழக்குகளில் கைதான பல சிறுவர்கள் இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறார் இல்லத்தின் வார்டனாக பிஜேந்திர குமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இதையும் படிங்க பாஸ்-  படப்பிடிப்பு முடிந்தது! சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்

இங்குள்ள சில சிறுவர்கள் சளி மற்றும் இருமல் மருந்துக்களை போதைக்காக அதிக அளவில் பயன்படுத்தி வந்துள்ளனர். சில தினங்களுக்கு முன் இந்த இல்லத்தை சோதனை செய்த வார்டன் பிஜேந்திர குமார், ஒரு அறையில் இருமலுக்கு பயன்படுத்தப்படும் இருமல் மருந்து பாட்டில்கள் அதிக அளிவல் இருந்தததை கண்டுபிடித்தார். அவற்றை பறிமுதல் செய்து, விசாரித்த போது இருமல் மருத்து பயன்படுத்துவது உறுதியானது. இதனால் 5 சிறுவர்களையும் வேறு அரசு கூர்நோக்கு இல்லத்திற்கு மாற்ற அனுமதி பெற்ற வார்டன். இந்த தகவலறிந்த சிறுவர்கள் கோபத்தில் வார்டன் துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு, வார்டனுக்கு தகவல் தெரிவித்த மற்றொரு சிறுவனையும் சுட்டு கொன்று விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதையும் படிங்க பாஸ்-  போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஜெய் மீது 3 பிரிவுகளில் வழக்கு

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய ஐந்து பேரில் ஒரு சிறுவன் ஜனதா தளம் கட்சியின் உள்ளூர் தலைவர் ஒருவர் மகன் என்று போலீசார் தெரிவித்தனர். எப்ப இந்த சிறுவர்களுக்கு துப்பாக்கி கிடைத்தது? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனார் காவல்துறையினர்.

இதையும் படிங்க பாஸ்-  படப்பிடிப்பு முடிந்தது! சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்