சினாவில் விக்கிபீடியா பக்கத்தை கடந்த சில நாட்களாக அனுக முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இணையத்தில் தேடு இயந்திரமாக அறியப்படும் விக்கிபீடியா தளம் சீனாவில் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது என அந்த வலைதளத்தை நடத்திவரும் விக்கிமீடியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பிரச்சனை கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இருந்து எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடக்கம் ஆங்கிலம் மட்டுமல்லாது மற்ற எல்லா மொழிகளுக்கும் நடந்துள்ளது. ஆனால் இதுபற்றி முறையான முன்னறிவிப்பு எதுவும் விக்கிபீடியா நிறுவனத்துக்கு சீன அரசு அளிக்கவில்லை என தெரிகிறது. விக்கிபீடியா பக்கங்களில் தகவல்களை பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் பதிவேற்றலாம் அல்லது எடிட் செய்யலாம். விக்கிபீடியா முடக்கத்தால் சீன மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சமீபத்தில் ரஷ்ய அரசு உலக இணையதள சேவையில் இருந்து விலக முடிவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.