சீனாவிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் அனைத்துப் பொருட்களுக்கும் வரி விதிக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா ஏற்கெனவே 50 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சீனப் பொருட் களுக்கு வரி விதித்துள்ளது.

அத்துடன் மேலும் 200 மில்லியன் டாலர் மதிப்பிலான சீனப்பொருட்களுக்கு வரி விதிக்கவிருப்பதாக திரு டிரம்ப் அறிவித்துள்ளார். வெகு விரைவில் புதிய வரி விதிப்பு நடப்புக்கு வரும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.