பாடகி சின்மயி தற்பொழுது டப்பிங் யூனியலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் கவிஞர் வைரமுத்து மீது பிரபல பின்னணிப் பாடகி சின்மயி அடுக்கடுக்காக பல பாலியல் குற்றச்சாட்டுக்களை வைத்தார். இது தமிழ் திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவருக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், கடும் எதிர்ப்பும் தெரிவித்தனர். சேலம் ராஜலட்சுமி கொல்லப்பட்டதற்கு சின்மயி வாயை திறக்காதது ஏன் என பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியனில் இருந்து சின்மயியை நீக்கியுள்ளனர். சின்மயி கடந்த இரண்டு வருடமாக கட்டணம் செலுத்தவில்லை என கூறி அவரை நீக்கியுள்ளனர். இதனை சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.