ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் கிடைத்த பெயரை தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியால் இழந்தவர் ஜூலி. சமூகவலைதளங்களில் இவரை அர்ச்சனை செய்யாதவர்களே இல்லை. ஒரு வழியாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து அவர்களது கூட்டணியைச் சேர்ந்தவர்களான சக்தி,காயத்ரி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேறினர்.

இந்நிலையில் பின்னணி பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கோபத்தை பதிவிட்டுள்ளார்.

சாதரணமான இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் மக்கள், அதையே அரசியலில் காட்டியிருந்தால் நாடு முன்னேறியிருக்கும் என்று கூறியுள்ளார். நாட்டை அழிப்பவர்களை கேள்வி கேட்க முடியலையாம், ஒரு ரியாலிட்டி ஷோ போட்டியாளரை துரத்தி அவமானப்படுத்துவதில் என்ன பயன்.

விளையாட்டுக்கு செய்தால் ஓகே, ஆனால் ஜூலி வீட்டு வாசலில் பிரச்சனை பண்ண சொன்னாங்களா? வெட்கமா இல்ல என கூறியுள்ளார்.