மீ டூ என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறத்தல்கள் தைரியமாக வெளியில் கூறிவருகின்றனர். கோலிவுட்டில் பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு கூறியதைத் தொடர்ந்து, பலபெண்கள் புகார் தெரிவிக்க, இந்த விவகாரம் திரைத்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த குற்றச்சாட்டினை மறுத்த வைரமுத்து, இதை சட்டரீதியாக சந்திக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுத்த சின்மயி வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனைதான் செய்ய வேண்டும் என ஆவேசமாக கூறினார்.

இந்நிலையில், சின்மயி ஏன் இந்த சம்பவத்தை நடந்தபொழுதே கூறாமல் கிட்டத்தட்ட 14வருடங்கள் கழித்து கூறவேண்டும் என பல தரப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கிடையில், சின்மயி இங்கு கவர்தான் பேசும், உண்மை பேசாது என அதிரடியான கருத்தை தெரிவித்தார். இவரின் இந்த கருத்து ஊடகங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் சின்மயியிக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

இந்த சூழலில் சின்மயி சமீபத்தில் ஒரு அட்டைப்படத்திற்கு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். இதில்’Just For Women’, ‘No Child’s Play’ என்ற வாசகங்கள் பதிவிடப்பட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.