சிரஞ்சீவிக்கு ஜோடியாகிறாரா ஐஸ்வர்யாராய்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ படத்தில் நாயகியாக நடித்த ஐஸ்வர்யா ராய், தற்போது தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவுள்ள அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சிரஞ்சீவியின் 150வது படமான ‘கைதி நம்பர் 150’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது அடுத்த படத்திற்கு அவர் கதை கேடு வருகிறார்.

இந்நிலையில் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி” என்ற சுதந்திர போராட்ட வீரரின் கதையில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தின் நாயகி கேரக்டர் வலுவானது என்பதால் இந்த படத்தில் சிரஞ்சிவிக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராயை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சிரஞ்சீவியின் படம் என்பதால், ஐஸ்வர்யா ராய் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வார் என படக்குழுவினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.