‘துாங்காவனம்’ புகழ் ராஜேஷ் எம். செல்வா உடன் நடிகர் விக்ரம் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷீட்டிங்கானது கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் விக்ரமுடன், அக்ஷரா ஹாசன், அபு ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் சில முக்கிய காட்சிக்காக படக்குழு தற்போது மலேசியாவில் ஷீட்டிங் நடத்தி வருகிறது. தீபாவளியை முன்னிட்டு ‘கடராம் கொண்டான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

படத்தின் கதைகளுக்கேற்றவாறு தன்னுடைய உடலமைப்பு மாற்றிக்கொள்ளும் நடிகர் விக்ரம், இப்படத்தில் உடல் முழுவதும் டாட்டுகளை குத்திக்கொண்டு, கைவிளங்குடன், புகை சூழ்ந்து நிற்க கூடிய இந்த தோற்றம் ரசிகர்களை மிரட்டும் வைகயில் அமைந்துள்ளது.

ராஜ்கமல் பிலிம் இண்டர்ரேஷனல் மற்றும் ஆர்.ரவிந்தரனின் திரிசூலம் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கிறது. விக்ரம் கடைசியாக நடித்து வெளிந்த படம் சாமி ஸ்கொயர். இந்நிலையில், அவருடைய அடுத்த படமான, கௌதம் வாசதேவ் மேனனின் இயக்கத்தில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், கடாரம் கொண்டான் படத்தின் ஸ்பெஷல் மோஷன் போஸ்டரை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.