பத்து மடங்கு பெரிய வில்லனை சந்திக்க தயாராகும் சீயான் விக்ரம்

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கவுள்ள ‘சாமி 2’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் முதல் தொடங்கவுள்ளது.

இந்த படத்தில் த்ரிஷா, கீர்த்திசுரேஷ் ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்க, வில்லனாக பாபிசிம்ஹா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் விக்ரம் கேரக்டரை விட பத்து மடங்கு பலசாலி கேரக்டராம் பாபிசிம்ஹாவின் வில்லன் கேரக்டர். எனவேதான் பாபிசிம்ஹாவை தேர்வு செய்ததாக இயக்குனர் ஹரி தெரிவித்துள்ளார்.

மேலும் விக்ரம், பாபிசிம்ஹா ஆகிய இருவருமே தேசிய விருது பெற்றவர்கள் என்பதால் இருவருக்கும் இந்த படத்தில் நடிப்பு போட்டி இருக்கும் என்றும் அதில் வெற்றி பெறுவது யார் என்பதை ரசிகர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் இயக்குனர் ஹரி கூறியுள்ளார்.

‘இருமுகன்’ படத்தை தயாரித்த ஷிபுதமீன்ஸ் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார்.