தயாரிப்பாளர் ஆகிறார், பி.வி. சிந்து!

கடந்த மாதம் கிளாஸ்கோவில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற இந்திய பேட்மின்டன் நட்சத்திரம்பி.வி சிந்து டிஜிட்டல் படத்தை இணைந்து தயாரிக்கிறார்.

ஆசிரியர் தினத்தைக் கொண்டாடும் வகையில் தனது பயிற்சியாளர் புலேலா கோபிசந்தைச் சிறப்பிக்கும் விதமாக, பிரபல விளையாட்டு பானம் தயாரிக்கும் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார் சிந்து. இந்த சிறு படத்தின் தலைப்பு “#IHATEMYTEACHER” என்று வைக்கப்பட்டுள்ளது.

பயிற்சியாளர் கோபிசந்துடனான தனது பயணத்தைக் குறித்து பேசுகையில், “என்னை முன்னிட்டு அவர் பெரிய கனவுகளைக் கொண்டுள்ளார். அவரே எனது நம்பிக்கை ஊற்று. அவரது இடைவிடாத முயற்சியை சிறப்பாக நிறைவேற்றுவதற்காக இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த கடமைப் பட்டிருக்கிறேன்” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், இந்த ஆசிரியர் தினத்தில் எனது வெற்றி முழுவதையும் அவருக்கு அர்பணிக்கிறேன் மற்றும் நம் வாழ்வில் உந்து சக்தியாக செயல்பட்டவர்களை அனைவரும் சிறப்பிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.