எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் என்ற திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. லட்சுமி குறும்படம் இயக்கிய சர்ஜூன் இயக்கிய படமிது. பெரிய அளவிலும் இல்லாமல் சிறிய அளவிலும் இல்லாமல் சுமாரான அளவில் இப்படம் பேசப்பட்டது.

இந்நிலையில் இப்படம் பற்றியும் பொதுவாக விமர்சனம் எழுதுவோர் பற்றியும் நடிகை வரலட்சுமி தனது கருத்தை இவ்வாறு கூறியுள்ளார்.

எச்சரிக்கை படம் பார்த்த அனைவருக்கும் நன்றி சிலர் பணம் வாங்கி கொண்டு விமர்சனம் எழுதுகிறார்கள், குறிப்பிட்ட தனக்கு பிடித்த நட்சத்திரங்களை மனதில் கொண்டு அவர்களுக்காக மட்டும் விமர்சனம் எழுதுகிறார்கள்.

எச்சரிக்கை படம் சிறிய பட்ஜெட் படம், பெரிய அளவில் விளம்பரப்படுத்தும் தயாரிப்பாளர் கிடையாது, பெரிய இசையமைப்பாளர் கிடையாது. இருந்தாலும் கஷ்டப்பட்டு உழைத்த படக்குழு உள்ளது. இதை மனதில் கொண்டு விமர்சிக்க வேண்டும்.

விமர்சனங்களை வைத்து ரசிகர்கள் ஒரு படத்தை பற்றிய முடிவுக்கு வராதீர்கள் நேரில் சென்று பாருங்கள்.

பெரிய நட்சத்திரங்களை மட்டும் பார்க்காதீர்கள், சிறிய நபர்களுக்கும் ஆதரவு கொடுங்கள், சிலர் பணம் வாங்கி கொண்டு விமர்சனம் எழுதுகிறார்கள் என கேள்விப்படுகிறேன். பணம் இல்லை என்றால் படத்தை பற்றிய விமர்சனம் சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகள் மீது தனி மனித ரீதியாக தாக்குதல் நடத்தப்படுகின்றன.

பல நேர்மையான விமர்சனங்கள் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது அவர்களுக்கு என் நன்றி எப்போதும் உண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.