• திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் திரைப்படம் மேற்கு தொடர்ச்சி மலை. நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பில் லெனின் பாரதி இயக்கி இருக்கிறார். மிக அழகான கலைப்படைப்பாக பல முக்கிய நபர்களால் தொடர்ந்து பாராட்டப்பட்டு வருகிறது இப்படம். முன்னணி தொலைக்காட்சி, பத்திரிக்கைகளும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.
  • லெனின் பாரதி ஏற்கனவே இயக்குனர் சுசீந்திரனிடம் உதவியாளராக இருந்தவர். அவரின் அழகர்சாமியின் குதிரையில் வேலை செய்த போதே இசைஞானியிடம் நல்ல நட்பு ஏற்பட்டிருக்கிறது
  • மேற்குத் தொடர்ச்சி மலை”டைரக்டர் லெனின் பாரதியின் தந்தை “டல்லு”ரங்கசாமி. இவரும் இளையராஜாவும்6,7,8 ம் வகுப்புகளில் ஒரே க்ளாஸ் மேட்ஸாம். “டல்லு,டல்லு,டல்லு.” என்ற பாடல் அன்றைய தினம் பேமசாம்.அதை அவர் அழகாகஅன்றைய தினம் மாணவர் சங்கத்தில் பாடி ஆட, இளையராஜாவும் சேர்ந்து பாடி ஆடுவாராம்.
  • ஒருமுறை அழகர்சாமியின் குதிரை படப்பிடிப்பின்போது இளையராஜாவுடன் லெனின் பாரதியும் காரில் செல்லும் சூழ்நிலை ஏற்பட அவர் யார் எந்த ஊர் என விசாரித்ததில் அவர் இளையராஜாவின் பள்ளி தோழர் டல்லு ரங்கசாமியின் மகன் என தெரிய வந்ததாதாம் உன் அப்பா எங்கே என பள்ளி தோழன் விசாரிக்க அவர் சென்னை வந்து மணிவண்ணன் உள்ளிட்டோரிடம் உதவியாளராக வேலை பார்த்தார் ஒரு இயக்குனராக வேண்டும் என்பது அவர் லட்சியம் ஆனால் காலமாகி விட்டார் என்றாராம் லெனின்.
  • அவன் ஏன் என்னை வந்து கடைசி வரை பார்க்கவில்லை என இசைஞானி வருத்தப்பட்டாராம்.
இதையும் படிங்க பாஸ்-  யுவன் எனக்கு அப்பா மாதிரி