நடிகை நயன்தாராவும் விக்னேஷ்சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்த ஜோடி பல நாடுகளுக்கு சென்று அங்கு இவர்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம். அது போல் சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவனுடன் நயன் தாரா நெருக்கமாக இருப்பது போல் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த நட்பில் அதிகம் காதலுள்ளது என அந்த புகைப்படம் பற்றி விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார்.