சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிராக பேசியதாக கூறப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் 15-ஆம் நாளான நேற்று காவல்துறை மாணியக்கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய பல கேள்விகளுக்கு முதல்வர் உரிய விளக்கத்தை பதிலாக அளித்தார்.

இதையும் படிங்க பாஸ்-  எடப்பாடியைப் போற்றி போஸ்டர்… ஆப்ஸண்ட் ஆன அமைச்சர்கள் – அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு !

அப்போது, சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்பவர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,மாநிலத்தின் தேவை கருதி சென்னை – சேலம் இடையே பசுமை வழிச் சாலை கண்டிப்பாக அமைக்கப்படும் என்றார்.

இதையும் படிங்க பாஸ்-  ஓடும் ரயிலில் நள்ளிரவில் பாலியல் தொந்தரவு: முன்னாள் ராணுவ வீரர் கைது!

மேலும், நடிகர் மன்சூர் அலிகான், 8 வழிச்சாலை அமைத்தால் 8 பேரைக் கொல்லுவேன் என வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியுள்ளார். அதனால்தான் அவர் கைது செய்யப்பட்டார். விவசாயிகள் யாரும் கைது செய்யப்படவில்லை என விளக்கம் அளித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.