தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழகத்தை மட்டுமல்லாமல் இந்தியாவையே உலக்கியுள்ளது. இந்த கொடூரமான சம்பவம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிந்தே நடந்திருக்கும் என திருவாடணை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் தமிழக காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து திமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்தை புறக்கணித்து அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டமன்றத்தை நடத்தினர். அதில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற நடிகர் கருணாஸும் கலந்துகொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நான் தமிழக அரசை குற்றம் சாட்டிப் பேசியதால் எனக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விலக்கிக்கொண்டுள்ளார். என்னைப் போன்றோருக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பில் கூட தலையிடத் தெரிந்த முதல்வருக்குத் தெரியாமலா தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றிருக்கும் என்று பகீர் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.