ஐஸ்வர்யா ராஜேஷ், சத்தியராஜ், சிவகார்த்திகேயன் ஆகியோர் நடித்த கனா படம் வெற்றியா தோல்வியா என்பது பற்றி தெரிந்துகொள்வோம்…

கடந்த 21ம் தேதி வெளியான படம் கனா. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்தியராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்ததோடு, ஒரு முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார்.

முதலாவதாக கிறிஸ்துமஸ் பண்டிகையை குறிவைத்து மாரி2, அடங்க மறு, சீதக்காதி, கே.ஜி.எஃப், சிலுக்குவார் பட்டி சிங்கம் ஆகிய படங்களோடு கனாவும் ரிலீஸ் ஆனதால் இப்படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இதுவே இப்படத்திற்கு எதிர்மறையாக அமைந்தது.

அடுத்து இப்படத்தின் பட்ஜெட் சிவகார்த்திகேயன் சம்பளம் இல்லாமல் ரூ.10.5 கோடி ஆகும். படத்தின் விற்பனை என பார்க்கும் போது, தமிழ்நாடு தியேட்டரிக்கல் ரைட்ஸ் ரூ.8 கோடி, கேரளா, கர்நாடகா, தெலுங்கு டப்பிங்/ரிமேக் ரைட்ஸ், ஹிந்தி டப்பிங், சாட்டிலைட், டிஜிட்டல், ஓவர்சீஸ் ரைட்ஸ் (ஜூ தமிழ்) 5 கோடி மற்றும் ஆடியோ ரைட்ஸ் என இப்படம் 14.25 கோடிக்கு விற்பனை ஆனது. எனவே, ரிலீஸுக்கு முன் இப்படம் ரூ.3.75 கோடி லாபத்தை பெற்றது.

இப்படத்தை பார்த்த அனைவருக்கும் இப்படம் பிடித்திருந்தது. மேலும், நேர்மறையான விமர்சனத்தையும் இப்படம் பெற்றது. ஆனாலும், மேற்கூறிய காரணங்கள் கனா அதிக வசூலை பெறவில்லை. இதில், லாபத்தில் வினியோகஸ்தர்களுக்கு ரூ.3 கோடியை திருப்பி தர வேண்டியிருப்பதால் சிவகார்த்திகேயனுக்கு ரூ.75 லட்சம் மட்டுமே லாபத்தை கனா பெற்று தந்துள்ளதாக பிரபல யூடியூப் சேனல் வலைப்பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.