சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசுக் கலைக்கல்லூரியில் 3பேர் கும்பல் , மாணவன் ஒருவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது.

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசுக் கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ பயிலும் பில்லூரை சேர்ந்த அஜித்ராஜா என்ற மாணவரை கல்லூரி வளாகத்தில் புகுந்த 3 பேர் கும்பல் அரிவாளால் வெட்டினார்கள்.

இதில் படுகாயமடைந்த மாணவன் அஜித்ராஜா, சிவகங்கை அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகின்றது. இந்த சம்பவம் குறித்து சிவகங்கை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.