10 வருடங்களாக கோமாவில் இருந்த பெண் குழந்தை பெற்ற விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸ் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 10 வருடங்களாக ஒரு பெண் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒருமுறை நீரில் மூழ்கிய போது ஏற்பட்ட விபத்தில் அவர் கோமா நிலைக்கு சென்றார்.

தற்போது அவர் அமெரிக்காவின் ஹஸீண்டா ஹெல்த்கேத் என்ற தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு செவிலியர்களும், மருத்துவர்களும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 29ம் தேதி அவர் வேதனை கலந்த குரலில் முனகினார். அதை அங்கிருந்த ஒரு நர்ஸ் கவனித்த போதுதான் அப்பெண்ணுக்கு பிரசவத்துக்கான அறிகுறிகள் தெரிந்தன. இதையடுத்து அவர் பிரசவ அறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

இந்த விவகாரம் நர்ஸ் மற்றும் மருத்துவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை யாரோ ஒரு மர்ம நபர் கற்பழித்திருக்கலாம் எனத் தெரிகிறது.

கண்டிப்பாக அது அந்த மருத்துவமனை ஊழியராகத்தான் இருக்க வேண்டும் எனக்கருதும் போலீசார் அவர்களுக்கு டி.என்.ஏ சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.