மீண்டும் மிரட்ட வருகிறது காஞ்சனா 3

லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி, காஞ்சனா, காஞ்சனா 2 வாிசையில் மீண்டும் மிரட்ட வரும் காஞ்சனா 3. இவா் பாகுபாலி புகழ் இயக்குநா் ராஜமவுலி மற்றும் கதையாசிாியா் விஜயேந்திர பிரசாத்தின் உதவியாளா் இயக்க இருக்கும்  காஞ்சனா 3 படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகி பின் நடிகராக அவதாரம் எடுத்தவா் லாரன்ஸ். தொடா்ந்து பேய் படங்களில் மட்டும் நடித்த வந்த லாரன்ஸ் மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா போன்ற படங்களில் நடித்துள்ளாா்.

முனி, காஞ்சனா வெற்றியை தொடா்ந்து இதன் 3ம் பாகம் உருவாக உள்ளது. படத்தின் ஒளிபரப்ப உாிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து லாரன்ஸ் தன்னுடைய சொந்த தயாாிப்பு நிறுவனமான ராகவேந்திரா புரொக்டஷன் மூலம் தயாாிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் ப்ரீ புரொக்டஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகா், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞா்கள் உள்ளிட்ட விபரம் குறித்த செய்திகள் அதிகாரப்பூா்வமாக விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.