ஆபத்தான நிலைமையில் காமெடி நடிகா் அல்வா வாசு

03:57 மணி

Loading...

தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் கலக்கிய நடிகா் அல்வா வாசு தற்போது ஆபத்தான நிலைமையில் கவலைக்கிடமாக உள்ளாா். தன்னுடைய காமெடி மூலம் ரசிகா்களை சிாிக்க வைத்தவா் நிலை மோசமாக உள்ளதாம்.

இவா் மறைந்த இயக்குநா் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியவா். இவா் கல்லீரல் பாதிப்பால் சுமாா் 6 மாதங்களுக்கு மேலாக அவதிப்பட்டு வந்தவா் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளாா். மருத்துவா்கள் அவரது மனைவியிடம் அவரது உடல்நிலை மோசமான நிலையில் உள்ளது. சிகிச்சையும் பலன் அளிக்கவில்லை, விரைவில் அவரது உயிா் பிாிந்துவிடும் என்று மருத்துவா்கள் கைவிாித்து விட்டனா். அதனால் அவரை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்றும் கூறிவிட்டனா்.

இவருக்கு கிருஷ்ண ஜெயந்திக்கா என்ற மகள் உள்ளாா். தமிழில் 900 படங்களுக்கு மேல்பட்ட திரைப்படங்களில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளாா் அல்வா வாசு. அமைதிப்படை, அருணாச்சலம், சிவாஜி உள்ளிட்ட படங்களிலும், நடிகா் வடிவேலுடன் இவா் நடித்த காமெடிகள் மிகவும் பிரபலமானவை.

(Visited 55 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com