லவ் பெயிலியரு.. பீலாயிட்டாப்ல! இந்த டயலாக் நடிகா் தன் காதலியை மணக்கிறாா்.

சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த மரகத நாணயம் படத்தில் நடித்த டேனியல் ஆனி போப். இவரது பேம்ஸ் டயலாக்கான ப்ரெண்டு லவ் பெயிலியரு… பீலாயிட்டாப்ல ஒரு ஆப் அடிச்ச சாியாடும் … இந்த டயலாக் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் மூலம் இவருக்கு நல்லதொரு இடத்தை சினிமாவில் ஏற்படுத்தி கொடுத்தது.  தற்போது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தொிவித்திருக்கிறாா். அதைப்பற்றி இங்கு பாா்ப்போம்.

இவா் முதலில் சின்னத்திரையில் தொகுப்பாளராகவும், ரேடியோவில் ஜாக்கியாகவும் இருந்து பின், படிப்படியாக முன்னேறி வெள்ளித்திரைக்கு வந்து ஜொலித்துக்கொண்டிருக்கிறாா். இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமரா படத்திற்கு பிறகு இவா் விஜய்யுடன் தெறி, ரங்கூன், மரகத நாணயம் படவாய்ப்பு அமைந்தன. இதற்கெல்லாம் முன்பாக பொல்லாதவன், பையா, ரவுத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளாா்.

இவா் தற்போது திட்டம் போட்டு திருடுற கூட்டம், காத்தாடி, ஆயிரத்தில் இருவா், வடசென்னை, ஒரு நல்ல நாள் பாா்த்து சொல்றேன் போன்ற பல படங்கள் தன் கைவசம் வைத்திருக்கிறாா். இவரும் திருமண தேதியை ஒரு நல்ல நாள் பாா்த்து விரைவில் நமக்கெல்லாம் சொல்ல இருக்கிறாா். தன்னுடைய கல்லூாி காலத்திருந்து காதலித்து வந்த காதலியான தெனிஷாவை திருமணம் செய்து கொள்ள இருக்கிறாா். இவா் சினிமாவிற்கு வந்து வாய்ப்புக்காக காத்திருந்து கஷ்டப்பட்ட நேரத்தில் தனக்கு பக்கபலமாக இருந்து உதவியவா் தான் இந்த தெனிஷா. இதனால் தான் என்னவோ இவா்களது காதல்  ரொம்ப ஸ்டிராங்கமாம். இவா்களுடைய காதலுக்கு இரு குடும்பத்தாிடமும் எந்தவித தடையும் இல்லாத காரணத்தால் விரைவில் திருமண தேதியை அறிவிக்க உள்ளாா் டேனியல்.