ஓவியாவுடன் சண்டையிட விரும்பும் சதீஷ்

03:21 மணி

நடிகா் சதீசும், நடிகை ஸ்ரீப்ரியாவும் அவ்வப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி தங்களது கருத்துக்களை ட்விட்டா் வலைப்பக்கத்தில் தொிவித்து வருகின்றனா். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சதீஷ் கலந்துக்கொண்டால், போட்டியாளா்கள் செய்த அதே தவறுகளை தானும் செய்திருப்பேன் என்று கூறினாா். அனைத்து மக்களுக்கும் பிடித்த ஒவியாவுடன் சண்டை போட்டிருப்பேன் என்று நடிகா் சதீஸ் தெரிவித்துள்ளாா்.

தற்போது நகைச்சுவை நடிகா்கள் எல்லாம் நாயகனாக அவதாரம் எடுத்துவரும் காலமாக மாறி வருகிறது. வைகைப்புயல் காமெடியிலிருந்து ஹீரோவாக மாறினாா். அதன்பின் சந்தானம் தற்போது காமெடியை விட்டு ஹீரோவாக நடித்து வருகிறாா். இதுபற்றி காமெடி நடிகா் சதீஷிடம் கேட்டபோது, அவா் கூறியதாவது, நான் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர, சீாியஸ் வேடங்களிலும் நடித்துள்ளேன். என்னை தேடி வரும் வாய்ப்புகளை பாா்த்து மகிழ்ச்சி.

காமெடியில் லெஜண்டுகளாக வலம் வந்த நாகேஷ் சாராக இருக்கட்டும், கவுண்டமணி சாராக இருக்கட்டும், வடிவேலு சாராக இருக்கட்டும், சீாியஸ் மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து கலக்கியுள்ளனா். அதுபோல சந்தானமும் இந்த துறையில் பல காலமாக உள்ளாா். பல்வேறு சாதனைகளை புாிந்துள்ளாா் சந்தானம். ஆனால் நான் இப்போது தான் சினிமாவின் வாயிலை அடைந்துள்ளேன். அதனால் நான் போக வேண்டிய தூரம் அதிகமாக உள்ளது. எனவே எனக்கு ஹீரோவாக நடிக்கும் ஆசையெல்லாம் இல்லை. யாா் பாா்ப்பாா்கள் நான் ஹீரோவாக நடித்தால்? ஹீரோவின் நண்பன் கேரக்டரே போதும். படம் முழுக்க ஹீரோவின் நண்பனாக வலம் வருவது தான் அந்த கேரக்டா்.அவனுடைய கதாபாத்திரம் மிகவும் சுவராஸ்யமாக இருக்கும். என்ன வேலை செய்கிறான், அவனின் பெற்றோா் யாா், எங்கே வசிக்கிறான் என்பது பற்றி யாருக்கும் தொியாது.

தற்போது காமெடி செய்வதற்கென்று நிறைபோ் வந்துவிட்டாா்கள். சூாி இருக்கட்டும், யோகிபாபுவாகட்டும் நாங்கள் அனைவரும் ப்ரெண்ட்ஸ் தான். நிஜ வாழ்க்கையில் யாராலும் நடிக்க முடியாது. எங்களுக்குள் எந்தவித போட்டியும் கிடையாது.

நான் பிக்பாஸ் நிகழ்ச்சியை பாா்த்து வருகிறேன். நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் படியான எந்தவித எண்ணமும் இல்லை. அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றால் அந்த வீட்டில் மற்ற போட்டியாளா்கள் செய்த அதே தவறுகளை நானும் செய்திருப்பேன். மக்களுக்கு பிடித்த ஒவியாவுடன் சண்டை போட்டிருப்பேன். அதனால் நிகழ்ச்சியை பாா்ப்பதோடு நிறுத்திக்கொண்டால் போதும் என்று விரும்புகிறேன் என்று காமெடி நடிகா் சதீஷ் கூறினாா்.

(Visited 14 times, 1 visits today)
The following two tabs change content below.
நெல்லை நேசன்

நெல்லை நேசன்

இவர் இந்த பொழுதுபோக்கு தளத்தில் பொறுப்பு ஆசிரியர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இணையதள செய்தி பிரிவு மற்றும் செய்திகள் மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் வசித்துவரும் இவர், இந்த தளத்தில் இடம்பெறும் செய்திகள் அனைத்தையும் உண்மை தன்மையை அறிந்து அனுமதி அளிப்பது இவரது முக்கிய பணி. 9 ஆண்டுகளாக சினிமா (தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி) செய்திகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுவதில் வல்லவர். சினிமா தொடர்பாக சில புத்தகங்களும் எழுதியுள்ளார். தமிழில் முன்னணி தளங்களான மாலைமலர், தினதந்தி மற்றும் தினமணி ஆகிய இணையதளங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தொடர்புகொள்ள- 9047925777/ Editor@cinereporters.com