அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க போவதாக மேடையில் ரகசியத்தை உடைத்தார் காமெடி நடிகர் விவேக்.

சர்கார் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் அட்லி இயக்கும் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார் தளபதி ‘விஜய்’.இப்படம் அட்லீ-விஜய் கூட்டணியில் உருவாகும் 3வது படம்.இதற்கு முன் இவர்கள் கூட்டணியில் வெளியான தெறி மற்றும் மெர்சல் ஆகிய இரு படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது.தற்போது ‘விஜய் 63’ படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க போவதாக அதிகாரபூர்வமாக தெரிவித்தனர்.இந்தப் படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக இப்போதே அறிவித்து விட்டது.

இந்த படத்தில்  இசையமைப்பாளராக இசைப்புயல் ‘ஏ.ஆர்.ரகுமான்’ ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பு இன்னமும்  அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்நிலையில், இப்படத்தின் காமெடியன் யார் என்பது மட்டும் தற்போது உறுதியாகியுள்ளது.

அண்மையில் பொது விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் விவேகிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் ‘விஜய் 63’ படத்தில் நடிக்கபோவதாக வந்த வதந்தி உண்மையா? என்ற கேள்விக்கு பதிலளித்த விவேக் ‘சத்தியமாக நான் ‘விஜய் 63’ படத்தில் நடிக்கிறேன் என்று கூறினார்.

எனவே, ‘விஜய் 63’ படத்தில் காமெடி நடிகர் விவேக் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.