சின்னத்திரையில் கலக்கியவா்கள் எல்லாம் வெள்ளித்திரையிலும் சூப்பராக மின்னி கொண்டிருக்கிறார்கள். சின்னத்திரையில் காமெடியில் கலக்கிய தேவதர்ஷினி பெரியத்திரையிலும் காமெடி புயலாக இருக்கிறார். இவா் நடித்த காஞ்சனா படத்தில் கோவைசரளாவுடன் சோ்ந்து அடித்த காமெடி கலாட்டாவை யாராலும் மறக்க முடியாது.

நடிகா் சேத்தனை காதலித்து திருணம் செய்து கொண்டார். சன் டிவியில் சீரியல்களில் நடித்தும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து பின் சண்டே கலாட்டா என்ற நிகழ்ச்சியிலும் அசத்தியவா் தேவதர்ஷினி. இந்த சண்டே கலாட்டா தொடரில் 300 எபிசோடுகளை கடந்து நடித்துள்ளார். இவா் இந்த நிகழ்ச்சியிலிருந்து தற்போது விலகி விட்டார். அதுகுறித்து அவா் கூறியதாவது, ஒரு சின்ன மாற்றத்திற்கு தான் இந்த ப்ரேக். ஒரே மாதிரியாக நடித்தாலும் போர் அடிக்கும் அல்லவா. அதனால் சின்னதாக ஒரு இடைவெளி. அது மட்மில்லாமல் அது நம்ம குடும்ப சேனல். எப்பவேண்டுமானலும் கலந்துக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ஜீ தமிழ் சேனலில் காமெடி கில்லாடிஸ் என்ற நிகழ்ச்சியில் தற்போது நடுவராக இருக்கிறார் தேவதர்ஷினி. சினிமாவில் அதிக வாய்ப்பு வருவதால் சின்னத்திரை பக்கம் தலைகாட்ட முடியவில்லை. என்னதான் இருந்தாலும் சின்னத்திரைத்தான் மக்களிடம் எளிதாக பழகும் வாய்ப்பு கிடைக்கும். அதனால் விரைவில் சின்னத்திரை பக்கம் இவரை பார்க்கலாம் என பேசப்படுகிறது.

காஞ்சனா 2வில் இவரால் நடிக்க முடியவில்லை. ஆனால் காஞ்சனா 3வில் கோவை சரளாவுடன் கலக்கல் காமெடியில் அசத்தியிருக்கிறாராம்.