வரும் ஆகஸ்ட் மாதத்தில் சமந்தா திருமணம்???

நடிகை சமந்தா, நாக சைதன்யாவுக்கு சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் இந்த ஆண்டு இறுதில் நடத்த முடிவு செய்திருந்தனர்.

இதற்கு முன்னதான நாக சைதன்யாவின் தம்பி அகில் மற்றும் அவரின் காதலி ஷ்ரேயாவுடன் திருமணம் நடத்த முடிவு செய்திருந்தன. எனவே அவரது காதலி  ஷ்ரேயாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்த நிலையில் திடீரென்று அகில்  ஷ்ரேயாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

எனவே அகில் திருமண ரத்தானது சகுன தடையாக நாக சைதன்யா வீட்டில் கருதுவதால் திருமணத்தை தள்ளி போடாமல் சீக்கிரம் நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளனர். வரும் ஆகஸ்ட் மாதங்களுக்குள் திருமணம் நடைபெற உள்ளது.

மேலும் அவர்கள் இருவரும்  தற்போது  படப்பிடிப்பில்  இருவேறு திசையில் பிரிந்துள்ளனர். திருமணத்துக்கு பிறகும் நடிக்க முடிவு செய்திருக்கும் சமந்தா மேலும் 3 புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.