அனைவருடைய கவனத்தை தன் பக்கம் திருப்பி போட வைத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி. பிரபல தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிப்பரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனா். இதை உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கியதால் மிகுந்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது. அதுவும் டிவி பார்க்கதவரையும் சனி மற்றும் ஞாயிறு அன்று கமலுக்காகவே பார்க்கும்படி வைத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி.அந்த நிகழ்ச்சியும் ஒரு வழியாக பல சா்ச்சைகளுக்கு இடையில் 100 நாட்களை கடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 2 தொடங்க உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் செய்த நல்லது கெட்டது இதன் மூலம் வெளியுலகத்திற்கு பாடம் பிடித்து காட்டப்பட்டது. ஒரு சிலா் தங்களது நல்ல செய்கைகளால் நல்ல பெயரை பெற்றனா். சிலருக்கு கெட்ட பெயா் கிடைத்தது. ஆனால் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த பல பேருக்கு பிக்பாஸ் மேடை நல்லதொரு அடித்தளம் அமைத்து கொடுத்தது. இதனால் பலருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்து படத்தில் நடித்து வருகிறார்கள்.

தற்போது பிக்பாஸ் இரண்டாம் பாகம் விரைவில் வரவிருக்கிற செய்திகள் ஏற்கனவே வெளியாகியது. இந்த சீசன் 2யை சூா்யா அல்லது அரவிந்த்சாமி தொகுத்து வழங்க இருப்பதாக செய்திகள் பரவி வந்தது. இதன் இரண்டாம் பாகம் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாம். இந்த நிகழ்ச்சியில் மாப்பிள்ளை சீரியல் ஸ்ரீஜா, தெய்வமகள் கிருஷ்ணா, கலக்க போவது யாரு பாலா, நடிகை ரம்பா, நடிகை சினேகா, பிரபல தொகுப்பாளினி டிடி, சரவணன் மீனாட்சி நாயகன் ரியோ, நாயகி ரச்சிதா, சிரிச்சா போச்சு வடிவேல் பாலாஜி,நடிகை ரியமிக்கா, கலக்கப்போவது யாரு கதிர், மைனா நந்தினி மற்றும் பிரபல வில்லன் ரியாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொள்ள போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் இது குறித்த உண்மையான நிலவரம் என்ன என்பது வருகிற ஜூன் மாதம் வரை ரசிகா்கள் பொறுத்திருக்க வேண்டும். கிருஷ்ணா நடித்துள்ள தெய்வமகள் சீரியல் முடிந்து விட்டதை பார்க்கும்போது இந்த தகவல் உண்மையாக இருக்கலாம் என நம்பமுடிகிறது.அதேபோல மாப்பிள்ளை தொடரும் முடிந்து விட்டது. எனவே காத்திருப்போம் ஜீன் மாதம் வரை.