மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாண விசாரணை ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என இங்கிலாந்து மருத்துவர் பீலே, துணை முதல்வர் ஓ.பி.எஸ், சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என பலரும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை செய்து வருகிறது. இதுவரை 150க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், துணை முதல்வர் சுகாதரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் 7ம் தேதியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஜனவரி 8ம் தேதியும், 9ம் தேதி லண்டன் மருத்துவர் பீலேவும், அதேபோல் அதிமுக எம்.பி. தம்பிதுரை ஜனவரி 11ம் ஆஜராக வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் பீலே வீடியோ காணெளி மூலம் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக முக்கிய தலைகள் பலருக்கும் விசாரணை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருபது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதிக்குள் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செயய் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.