Connect with us

செய்திகள்

காரின் மேல் விழுந்த கான்கிரீட் ஸ்லாப் – மயிரிழையில் உயிர் தப்பித்த நடிகை

Published

on

Actres Archana Kavi – பிரபல நடிகை சென்று கொண்டிருந்த காரின் மீது கான்கிரீட் ஸ்லாப் விழுந்து ஏற்பட்ட விபத்தில் அவர் மயிரிழையில் உயிர் தப்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் அர்ச்சனா கவி. இவர் சமீபத்தில் கொச்சி விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இவர் அந்த பகுதியை கடந்த போது,மெட்ரோ ரயில் தூணில் இருந்து கான்கிரிட் ஸ்டால் அவரின் கார் கண்ணாடி மீது விழுந்தது. இதில், அவரின் கார் பலத்த சேதமடைந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அவருக்கும், ஓட்டுனருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

அதை புகைப்படங்கள் எடுத்து அர்ச்சனா கவி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், கார் ஒட்டுனருக்கு இழப்பீடு கொடுக்கும்படி மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் காவல் துறையினருக்கு அவர் கோரிக்கை வைத்துள்ளார். அதேபோல், இதுபோல் மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Trending