விஜயுடன் நடிக்க நிபந்தனைகள் உண்டு – மகேஷ் பாபு

07:11 காலை

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு – ராகுல் ப்ரீத் சிங் இணைந்து நடித்து வரும் படம் “ஸ்பைடர்”. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பரத். ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கின்றார்.

மேலும் இப்படத்தின் ப்ரஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் படப்படிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வருகிற ஜூன் 23ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

சமீபத்தில் மகேஷ் பாபுடனான சந்திப்பின் போது, விஜயுடன் நடிப்பது பற்றி சில கேள்விகளை முன்வைத்தனர். அதற்கு அவர் கூறியதாவது,

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற படத்தில் விஜயுடன் நடிக்கவிருந்தாதகவும் ஆனால் அப்படத்தின் திரைக்கதை அமைக்க முடியாமல் போனது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படம் தொடங்காமலேயே ரத்து செய்யப்பட்டது என கூறினார்.

மேலும் விஜயுடன் நடிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா என்று கேட்ட போது,  அவர் கூறியதாவது, விஜயுடன் நடிக்க ஒரு சில நிபந்தனைகள் உண்டு. எனக்கும் விஜய்க்கும் சமமான கதாபாத்திரம் அமைய வேண்டும். அப்படி அமைந்தால் நான் இணைந்த்து நடிக்க தயாராக இருப்பகதாவும் மேலும் இவ்வாறு இருவருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் படம் இயக்க  ஏ.ஆர் முருகதாஸால் முடியும் என தான் நினைப்பதாக அவர் கூறியுள்ளார்.

The following two tabs change content below.
மோகன ப்ரியா
இவர் 2 ஆண்டுகளாக சினிமா தளத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். பொழுதுபோக்கு செய்திகள் தருவதில் நல்ல அனுபவம் வாய்ந்தவர். சமூக வலைதளங்களில் பொழுதுபோக்கு பதிவுகளை உடனுக்குடன் செய்திகளாக உருவாக்கி தளத்தில் பதிவிட்டு வருகிறார். நகைச்சுவையான மீம்ஸ்கள் உள்ளிட்ட சில பிரிவுகளை இவர் கவனித்துவருகிறார். தொடர்புகொள்ள- moghnaselvaraj@gmail.com