Connect with us

செய்திகள்

கூகுள் குழப்பியடிக்கும் தமிழ்ப்பட டைட்டில்கள் ஒரு பார்வை

Published

on

தமிழ் சினிமாவின் தலைமுறையை நான்கு தலைமுறையாக பிரிக்கலாம் அதாவது சுதந்திரத்திற்கு முன் சினிமா அறிமுகமான காலத்தில் இருந்து 50ம் ஆண்டு வரையான தியாகராஜபாகவதர், தண்டபாணி தேசிகர் போன்றோர் சூப்பர் ஸ்டாராக இருந்த காலம் அந்தக்கால நபர்களில் பெரும்பாலும் யாரும் உயிருடன் இல்லை, உயிரோடு இருந்தாலும் கம்ப்யூட்டரை கையாளும் அளவு மொபைல் போனை இயல்பாக கையாளும் அளவு அப்டேட் நிலையிலோ இயல்பு நிலையிலோ இருப்பதில்லை மிகுந்த வயது முதிர்ந்தவர்களாக இருப்பார்கள் அதாவது 80 வயதுக்கு மேல் உள்ளவர்கள்.

அதற்கு அடுத்த தலைமுறை ஒன்று உண்டு எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர் காலத்து

ஆட்கள் ஒரு தலைமுறை இவர்கள் இரண்டாம் தலைமுறை இந்த தலைமுறை ஆட்களில் ஒரு சிலருக்கு அதாவது 60,65.70 இந்த வயதிற்குள் உள்ள நல்ல படித்தவர்கள் அரசு வேலை உயர்பதவியில் இருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறுபவர்கள், சாதாரணமாக கம்ப்யூட்டர், மொபைல்போன் கூகுள், என இந்த காலத்து வகையறாக்களை கையாள தெரிந்தவர்கள், பாடும் செயலியான ஸ்முலில் கூட இந்த வயதுடைய முதிர்ந்த நபர்கள் சரியாக கையாள தெரிந்து பாடுபவர்கள் உண்டு.

மூன்றாம் தலைமுறையானது ரஜினி,கமல்,விஜயகாந்த் ரசிகர்களை உள்ளடக்கியது இவர்கள் 45,50 வயதுக்குள் இருப்பர் இவர்கள் ஓரளவு இக்காலத்து வகையறாக்களை இயக்கத்தெரிந்த நபர்கள் என சொல்லி தெரிய வேண்டியதில்லை.

நான்காம் தலைமுறையான விஜய் அஜீத் வகையறாக்களையும் இன்னும் புதிய ஹீரோக்களை ரசிக்கும் ஐந்தாம் தலைமுறையை பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. மிக இயல்பாக இந்தக்காலத்து நவீன சமாச்சாரங்களை சாதுர்யமாக சரியாக கையாள தெரிந்தவர்கள் இவர்.

எதற்காக இவ்வளவு தலைமுறையை பற்றி சொல்லப்படுகிறது என்றால் இந்த எல்லா தலைமுறை ஆட்களும் ஏதோ ஒரு வழியில் இணையம் சார்ந்து இயங்குகின்றனர்.

ஒரு பாடல் இல்லையா அந்த படத்தின் பெயரை போட்டு கூகுளில் தேடினால் உடனே கிடைக்கும். கூகுளில் தேடியவுடன் கிடைப்பதை கூகுள் சர்ச் இஞ்சின் மிக துல்லியமாக கிடைக்க செய்கிறது.

ஆனால் சில வருடங்களாக தமிழ்ப்படங்களின் இயக்குனர்கள் ஏற்கனவே வெளிவந்த படத்தின் டைட்டிலை அதிகமான படங்களுக்கு வைத்து வருகின்றனர். இந்த நிலையால் கூகுளில் தேடி இணையம் சார்ந்து இயங்கும் பல்வேறு வயதுடைய20வயது முதல் 70 வரையிலான பல தீவிர சினிமா ரசிகர்கள் குழப்பமடைகின்றனர்.

ஆரம்பத்தில் ஒன்றிரண்டு படங்கள் வந்த நிலை போய் எல்லா படங்களும் பழைய படத்தின் பெயரையே தாங்கி வருகின்றன.

பெரும்பாலும் ரஜினி நடித்த பழைய ஹிட் படங்கள் மீண்டும் அதே பெயரில் திரைக்கு வந்து ஏற்கனவே வெற்றி பெற்ற படத்தின் மாண்பை கெடுக்கின்றன. பழைய படத்திற்கு என அந்த படத்தின் கதைக்கு என அந்தப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள் என அந்த படத்திற்கு என நீண்ட தனித்துவம் கூட உண்டு அந்த திரைப்படம் 100 நாள் கடந்து ஓடிய படமாகவும் இருக்கலாம்.

ஆனால் டைட்டில் மட்டும் பந்தாவாக இருக்க வேண்டும் என கதையிலும் திரைக்கதையிலும் கோட்டை விடும் இயக்குனர்கள் அதிகம் உண்டு, ரஜினி பெயரை தாங்கி வந்த டைட்டில்களில் பொல்லாதவன் திரைப்படம் மட்டுமே ஓரளவு வெற்றியை பெற்றுக்கொடுத்தது.

ரஜினி நடித்த போக்கிரிராஜா, வேலைக்காரன்,படிக்காதவன் இன்னும் சில படங்கள் புதிதாக வெளிவந்து வெற்றியை பெற தவறின. இணையத்தில் சென்று ரஜினி நடித்த போக்கிரி ராஜா என்று டைப் செய்தாலும் முதல் தகவலாக அந்த போக்கிரிராஜா படத்தை பற்றியோ அந்த படத்தின் பாடல்களை தரவிறக்கம் செய்யவோ முடியவில்லை. மிகுந்த சிரமத்திற்கிடையில் கூகுளில் கடைசியாக இருக்கும் ரிசல்ட்டில்தான் பார்க்க நேரிடுகிறது. முதல் தகவலாக ஜீவா நடித்த போக்கிரி ராஜாவே வந்து நிற்கிறது.

சிவகார்த்திகேயன் நடித்த காக்கிச்சட்டை படத்தை குறைவாக மதிப்பிட முடியாது நல்ல திரைப்படம்தான் நல்ல திரைக்கதைதான் ஆனால் இதுபோல உறுப்புகளை கடத்தும் வில்லன் என வித்தியாசமான கதையை யோசிக்க தெரிந்த இயக்குனர் அதைவிட நறுக்கென்ற டைட்டிலை யோசிக்க தவறியது ஏன் என்று தெரியவில்லை.

சத்யா மூவிஸின் தயாரிப்பான 85ல் வந்த காக்கிச்சட்டை கமலஹாசன்,சத்யராஜ் நடிப்பில் மிக புகழ்பெற்ற படம் மூன்றாம் தலைமுறை ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் அந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரும் ஹிட்டானவை அப்படிப்பட்ட ஒரு படத்தை இன்று இணையத்தில் சென்று தேடிப்பாருங்கள் உடனே கிடைக்காது முதல் தகவலாக சிவா நடித்த காக்கிச்சட்டை பற்றிய தகவலே வரும்.

எத்தனையோ நல்ல பழைய திரைப்படங்களை இன்றைக்கு இருக்கும் இளைய இணையதலைமுறை தெரிந்து கொள்வதில்லை. அதை மேலும் பின்னடைவாக செய்வது போல இது போன்ற மீண்டும் வைக்கப்படும் படத்தின் டைட்டில்கள் செய்கின்றன.

அதே கண்கள், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் எல்லாம் அந்தக்காலத்தில் வெற்றி முரசு கொட்டிய படங்கள் இந்த படங்களை போய் இணையத்தில் தேடினால்

எம்.ஜி.ஆர் ரசிகர்களால் கொண்டாடபட்ட ஆயிரத்தில் ஒருவன் படத்தை எல்லாம் தேடினால்

கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன், விஜய் சேதுபதி நடித்த அதேகண்கள் பற்றிய தகவல்கள்தான் அதிகம் காணக்கிடைக்கின்றன.

உதாரணமாக ரஜினி நடித்த நான் சிகப்பு மனிதன் படம் நடிகர் விஜயின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் அவர்களால் இயக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் இந்த படத்துக்கென அக்கால ரசிகர்கள் உண்டு, இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரும் ஹிட் பாடல்கள் உண்டு இப்பாடல்களுக்கு இன்றும் மிகப்பெரும் ரசிகர் கூட்டம் உண்டு, இவ்வளவு தனித்துவமுள்ள காலம் கடந்து பேசக்கூடிய படத்தின் பெயரை விஷால் நடித்த படத்திற்கு வைத்தார்கள் படம் எத்தனை நாள் ஓடியது என நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

ஆனால் இணையத்தில் விஷால் நடித்த படமே முதன்மை தகவலாக கூகுள் காண்பிக்கிறது. அப்படியென்றால் உண்மையில் எல்லாவிதமான படத்தையும் பார்க்க வேண்டும் என நினைக்கும் தெரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கும் இக்கால இளைஞனைக்கூட நீ ஒரு வெற்றிபெற்ற படத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டாம் என சொல்லாமல் சொல்வது போல் உள்ளது.

ஒரு படத்தின் கதையை யோசிப்பவர்கள் ஏற்கனவே வெற்றிபெற்ற படத்தின் டைட்டிலையே மீண்டும் வைத்து அந்த படத்திற்கு உண்டான தனித்துவத்தையும் இழக்க வைத்து டைட்டில் வைத்த தனது படத்தையும் பெரும்பாலும் தோல்வியடைய செய்கின்றனர்.

இதனால் பழைய சிவாஜி எம்.ஜி.ஆர் ,ரஜினி,கமல், ரசிகர்கள் இணையத்தில் தங்களின் அபிமான கதாநாயகன் குறித்த தகவல்கள் பாடல்களை சேகரிக்கும்போது அது குறித்த தகவல் கிடைப்பதில்லை. அப்படி இருக்கும் தகவல்கள் கூகுளின் தகவல் வரிசையில் பின்னாலே சென்றுவிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது இதனால் இதனின் ரசிகர்கள் மிகுந்த மனவேதனைக்குள்ளாகி வருகின்றனர்.

சிறந்த கதையையும் திரைக்கதையையும் உருவாக்கி அதற்கு வித்தியாசமான பெயரை வைத்து ஜெயித்த இயக்குனர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.இன்னும் சிறந்தபுதிய டைட்டில்களோடும் சிறந்த கதைகளோடும் எத்தனையோ இயக்குனர் வாய்ப்பு தேடி அலைகிறார்கள்.

இப்படி அதிக ரிஸ்க் எடுக்காமல் ரஜினி,கமல் நடித்த படங்களின் டைட்டிலை வைத்தால் படம் ஓடி விடும் என கதைமேல் சரியான நம்பிக்கை கொள்ளாமல் எல்லா தலைமுறை ரசிகர்களையும் குழப்பும் செயலை திரையுலகம் கைவிடுமா?

 

meena
செய்திகள்4 mins ago

ரஜினிக்காக சண்டை போடும் மீனா குஷ்பு… கலாய்த்த ரசிகர்.. வைரல் வீடியோ

nithiya
செய்திகள்16 mins ago

ரொம்ப ஓவராத்தான் போறீங்க.. குத்தாட்டம் போடும் நித்தியானந்தா பெண் சீடர்கள். வைரல் வீடியோ

nithiyananda
செய்திகள்31 mins ago

நானே மனிதத்தின் எதிர்காலம் ; என் மீது புகார் கூறுபவர்கள் முட்டாள்கள் : நித்தியானந்தா அடாவடி

thalaivar
செய்திகள்55 mins ago

பூஜையுடன் தொடங்கிய தலைவர் 168 – வைரல் புகைப்படம்

செய்திகள்1 hour ago

தலைவர் 168 ; கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரம் இதுதான் – லீக் ஆன செய்தி

செய்திகள்2 hours ago

5 ஆவது மாடியில் இருந்து விழுந்த குழந்தை – கைகொடுத்த அதிர்ஷ்டம் !

செய்திகள்4 hours ago

பழுதாகி நின்ற வாகனங்கள் … பங்கை முற்றுகையிட்ட வாகன ஓட்டிகள் – கலப்பட பெட்ரோலால் குழப்பம் !

செய்திகள்4 hours ago

ஒரு தலை காதல்… பஸ்ஸில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர் – இது என்ன சினிமாவா ?

bigil
செய்திகள்3 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்4 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்3 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்3 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்4 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்2 weeks ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்2 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending