2.0 படத்தின் ரிலீஸ் பலமுறை தள்ளி வைக்கப்பட்டு கடைசியாக நவம்பர் 29ம்தேதி ரிலீசாகும் என சொல்லப்பட்ட நிலையில் அடுத்ததாக ஷங்கர் கமலை வைத்து இயக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

இந்நிலையில் லைகா நிறுவனம் ஏற்கனவே தயாரித்த சபாஷ் நாயுடு படத்தை முடித்து கொடுக்கும்படி செய்தால் இந்தியன் 2 படத்தை  பைனான்ஸ் சிக்கல் இல்லாமல் எடுக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்களாம் ஏனென்றால் சபாஷ் நாயுடுவில் பல கோடியை லைகா முடக்கி இருக்கிறதாம்.

இருந்தாலும் பிக்பாஸ் படப்பிடிப்பு நடப்பதால் சபாஷ் நாயுடுவை இப்போதைக்கு முடிக்க முடியாது என குழப்புகிறாராம் கமல்.

ஏற்கனவே மர்மயோகி படம் விவகாரத்தில் அந்த படத்தை முடிக்க முடியாமல் அங்கு பைனான்ஸ் செட்டில் செய்ய முடியாமல் கோர்ட்டுக்கு போய் அங்கு திரும்ப மர்மயோகியை முடிக்கிறேன் என சொல்லி விஸ்வரூபம் 2 மீதான தடை நீக்கப்பட்டது.

கமல் சினிமாக்களில் செய்து வரும் குழப்பமான நிகழ்வு பலரையும் குழப்புகிறது.